Diary Of Food & Violence

Angamaly Diaries (Malayalam)
Genre: Drama

உணவும் வன்முறையும் ஜாதி பேதம் இல்லாமல் மக்கள் அனைவரிடமும் ஒட்டியிருக்கும் ஒன்று. இரண்டையும் பிரிக்க இயலாது. அப்படி உணவையும் வன்முறையையும் இரு கண்களாக கொண்டுவாழும் மக்களின் கதையே இந்த படம்.

உண்விற்கே பேர் போன, குறிப்பாக பீப் மற்றும் பன்றி இறைச்சிக்கு பேர் போன இடம் Angamaly. தேவாலயம் அதிகம் இருக்கும் இடமாக இருந்தாலும், அதற்கு நிகரான இறைச்சி அங்காடிகள் இருக்கும் இடம். Angamaly – உணவு, இசை, உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இடமாக கருதபடுகிறது. எர்ணாகுளம் மாவட்டத்தின் ஒரு முக்கிய டவுனாகவும் அது கருதப்படுகிறது.

அப்படி உணவு, இசை, உறவுகள் பின்னிருக்கும் ஊர்சார்ந்த இளைஞர்களை பற்றிய படம், இல்லை ஆவணம் என்றும் கூறலாம். அந்த ஆவணத்தை 86 புதுமுகங்களை கொண்டு இயக்கி இருக்கிறார் Lijo Jose Pellissery. இவர் இதற்கு முன் Nayakan, City Of God, Amen, Double Barrel போன்ற படங்களை இயக்கியவர். மலையாள ஸ்டீரியோடைப் படங்களில் இருந்து இவரது படங்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

அப்படி இந்த படத்தில் இருக்கும் விஷயம் தான் என்ன. புதுமை. பழமையை புதுமையாக காட்டியதே, இதில் புதுமை. ப்ரேமம், களி, கம்மட்டிபாடம், சுப்ரமண்யபுரம் போன்ற படங்களை தனி தனியே பார்த்த போது ஏற்பட்ட விவப்பு, ஒட்டுமொத்தமாக இந்த படத்தில் ஏற்பட்டது. அதற்காக இந்த படம் அந்த படத்தின் சாயலில் உருவாக்கபட்டுள்ளது என்று கூற முடியாது. அந்த படங்களில் கையாளபட்டிருக்கும் அனைத்து கூறுகளும் ஒன்று சேர் அமைந்ததே இந்த படம். அதற்கு மூல காரணம் எழுத்து, ஒளிப்பதிவு, இசை மற்றும் ஒலிக்கலவை.

எழுத்து, Chemban Vinod Jose பலருக்கும் இவர் நடிகராகவே தெரியும். Nayakan, City Of God, Kali, Amen போன்ற படங்களில் நடித்தவர். எழுத்தாளராக இந்த படத்தில் ஒரு புது அவதாரம் எடுத்துள்ளார். மண் மனம் மாறா கதைகளை அம்மண் சார்ந்த மக்களே கூறும் பொழுது அதில் ஒருவித உணர்ச்சிகள் இருக்கும். இப்படத்தில் அதை நாம் உணர்வதற்கான காரணம் இவரே. இவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் Angamalyவில் தான். ஆக மற்றவர்களை விட அவ்வூரை பற்றி இவருக்கு அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அது எழுத்தாளராக எதை திரையில் பதிக்க வேண்டும் என்று நன்றாக உணர்ந்து ஒரு சமூகத்தின் வெளிப்பாடகாவே இப்படம் இருந்தமைக்கு முக்கிய காரணம் Chembam Vinod அவர்களே.

எழுதிய வார்த்தைகள் ஏட்டில் இருப்பதைவிட திரைக்கு வரும் பொழுது அதன் உணர்வுகளே வேறு. அப்படி ஏட்டில் இருக்கும் வார்த்தைகளை பிழை இல்லாமல் தனக்கான பாணியில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் Lijo Jose Pellissery.

இது Lijo Joseன் ஐந்தாம் படைப்பு. என்னை கேட்டால் இந்த படைப்பை நான் அவர் இயக்கிய amen படத்தோடு ஒப்பிடுவேன். அந்த படத்தில் கிறிஸ்த்துவ மதசார் பேண்ட் வாத்திய கலைஞனை பற்றிய ஒரு slapstick திரைப்படம். இந்த அதே கிறிஸ்த்துவ மத சார் மக்களின் உணவு மற்றும் உணர்வு வாழ்க்கையை பற்றியது. மதங்கள் ஒன்றானாலும், இருக்கும் இடத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்வியல் வெளிப்பாடு மாறிக்கொண்டே இருக்கும். அப்படி வேறு மண்சார்ந்த மக்களின் வெளிப்பாட்டை மண்மனம் மாறாமல் புதுமுகங்களை வைத்து கொண்டு நம்மையும் Angamalyவில் பயனிக்க செய்துள்ளார். அதற்கு ஒளிப்பதிவாளருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்தே ஆக வேண்டும்.

ஒளிப்பதிவு, Girish Ganghadaran. Kali, Neelakasham Pachakadal Chuvanna Bhoomi போன்ற படங்களின் ஒளி ஓவியன் இவரே. ஒரு ஒளிப்பதிவாளிர் பங்கு ஒரு இயக்குனரின் கண்களாக பிரதிபலிப்பதில் தான் உள்ளது. இந்த இயக்குனரின் முந்தைய படைப்புகளான Amen மற்றும் Double Barrel படங்களின் ஒளிப்பதிவு இரண்டுன் வேறு ஒரு extremeல் இருக்கும். இந்த யதார்த்தத்தின் பார்வையாகவே இருந்தது. அவரின் திறமையே இந்த படத்தை ஒரு ஆவணம் போல் பதிவு செய்ததில் தாப் தெரிந்தது. படம் பார்க்கும் உணர்வை மீறி ஊருக்குள் இருந்து நடக்கும் விஷயங்கள் பார்க்கும் மக்கள் பார்வையாகவே இருந்தது. குறிப்பாக இறுதி காட்சி single takeல் எடுக்கபட்டவிதன், அந்த ஷாட் முடிவடையும் இடம் வரை நம்மை இரு பரபரப்பில் ஆழ்த்த வைத்த பெருமை ஒளிப்பதிவாளரையே சாரும்.

இவர்கள் அனைவரையும் தாண்டி படத்தின் மிகமுக்கிய பலம் Prashant Pillai. படத்தின் இசை அமைப்பாளர். இதுவரை lijo jose இயக்கிய அனைத்து படத்திற்கும் இவரே இசை. Lijo Joseஐ பொறுத்தவரை ஒலிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். அது அவரின் படத்தை பின்பற்றுபவருக்கு புரியும். ஒலி (மற்றும் இசை) வாழ்வோடு கலந்த ஒன்று ஆணித்தனமாக நம்புபவர் lijo. அதை மீண்டும் இப்படத்தில் தனது முதுகெலும்பான Prashant உடன் சேர்ந்து மீண்டும் நிருபித்துள்ளார். ஆரம்த்தில் துவங்கி இறுதிவரை மணமனம் மாறா இசை. காதில் ரம்மியமாக. அதுமட்டுமின்றி வழக்கம் போல் சில experimentம் கூட. நான் மிகவும் ரசித்தது ‘இளமை இதோ இதோ Band Version’ பட்டையை கிளம்ப்பியது.

மேற்கூறியது போல படத்தில் மொத்தன் 86 புதுமுக நடிக நடிகைகள். கனகச்சிதமான தேர்வு. எழுத்து மற்றும் இயக்கத்தின் வலிமை படத்தில் வந்த அனைத்து கதாபாத்திரங்களும் படம் முடிந்த பின்பும் நம் மனதில் நிற்பதுவே. கதாபாத்திர வடிவமைப்பு, அவர்களின் நடிப்பு அனைத்தும் நமக்கு அந்த ஊர் மக்களை கண் முன் நிறுத்தும்.

எச்சில் ஊறவைக்கும் படத்தின் ஆரம்பம், உணவின் முக்கியத்துவம், உறவின் முக்கியத்துவம், பகை என்று வந்தாலும் ஊராரின் மன வெளிப்பாடு, வன்முறை, வஞ்சம், காதல், மனம் மாறா சூடான பீப் மற்றும் பற்றி இறைச்சி. இவை அனைத்தும் பல காலம் நம் மனதில் இருக்கும் இந்த Angamaly Diaries படத்தின் மூலம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s