Kadhalum Kadanthu Pogum

Kadhalum Kadanthu Pogum
Genre: Romance / Comedy

காதல் என்பது நம்மை கடந்து செல்லும் காற்றை போல. காற்று இல்லாமல் ஒருவனால் வாழ முடியது, அதே சமயம் அந்த காற்றை உணர முடியுமே தவிர பார்க்க முடியாது. காற்று இல்லாத இடம் இல்லை, ஒவ்வொரு மனிதனையும் (உயிரினத்தையும்) அந்த காற்று கடந்து சென்றபடி இருக்கும். படம் பார்த்து முடிந்தவுடன் என்னுள் தோன்றிய உணர்வுகளின் பதிவே இந்த வார்த்தைகள்.

wp-1489236627504.jpg

ஒரு படத்தின் வேகம் திரைக்கதை நியமிப்பது அல்ல. கதை அதை தீர்மானிக்கும். ஒவ்வொரு கதைக்கும் ஒரு வித pace உண்டு. அதை அறிந்து அதை திரையில் படைப்பவனே சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குனர் என்ற வரைமுறைக்குள் அடங்குவர். இந்த படத்தின் திரைக்கதை கண்டிப்பாக சூது கவ்வும் போல் வேகமாக இருக்காது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பொறுமையாக மட்டுமே செல்லும். பரபரப்பான காட்சிகள் என்று படத்தில் ஏதும் இருக்காது. ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்மை படத்தோடு நம்மை இருக்கமாக அமர செய்யும்.

ஒட்டு மொத்தமாக எனக்கு மிகவும் பிடித்த விஷயம், ஊரே போற்றிய ஒரு கிளாஸிக்கை எடுத்து ரீமேக் செய்யாமல், தனக்கு பிடித்த ஒரு படைப்பை தன்னுடய பாணியில் தனக்கே உரிய தனித்துவத்தோடு இந்த படத்தை படைத்தது தான்.

பலர் ஏன் இந்த படம், வேறு படமே இல்லையா ரீமேக் செய்ய என்று கேட்டனர். கேட்டவர் எந்த படத்தையும் அவருக்கு பரிந்துரை செய்திருக்க மாட்டார்கள். ஒரு படத்தை ரீமேக் செய்ய அந்த படம் எப்படி பட்ட படம் என்பதை விட, அது தன்னை கவர்ந்த படைப்பாக இருப்பதே முக்கியம். காரணம், மற்ற பெண்களை வருணிப்பதை விட, தன் காதலியை ஒரு காதலன் வருணிப்பதில் இருக்கும் அழகே ஒரு அழகு தான். அதை நான் இந்த படத்தில் பார்த்தேன். ரசனை மிகு கலைஞனால் மட்டுமே கவிதையை சமர்பிக்க முடியும்.

என்னை பொருத்தவரை இந்த படம் ஒரு கவிதை. கவிதையை 24 மணிநேரமும் படிக்க முடியாது, கவித்துவமாக 24 மணி நேரமும் பேசமுடியாது. அது போன்று தான் வழக்கமாக புழக்கத்தில் இருக்கும் படைப்புகளுக்கு மத்தியில் ஒரு கவிதை. அதே சமயம் கவிதை தொடர்ந்தாலும் பிரச்சனையே. இனிப்பாக இருக்கிறது என்று இனிப்பை மட்டுமே மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த படமும் அப்படிதான்.

எனக்கு பிடித்ததால் இது சிறந்தபடம் என்று கூறுவதிலும், கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று கூறுவதிலும் எனக்கு உடன் பாடில்லை. காரணம் என்னை போல பலருக்கும் வெவ்வேறு ரசனை உள்ளது என்பதை நம்புபவன் நான். பார்க்க விருப்பம் இருந்தால் பாருங்கள்.

காதலும் கடந்து போகும் – என்னை கடந்து சென்ற பின்னும் அவள் மனம் இன்னும் என்னையே சுற்றி கொண்டிருப்பதை போல.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s