Bloddy Monsters

When the hangman catches,
you don’t die by no bullet.
When the hangman catches you,
you hang. #Blackman #Whitehell

TheHatefulEight

எழுத்தின் வலிமையை, அச்சு மாறாமல் திரையில் கொண்டுவரும் போதே உணர முடியும். அது அனைத்து படத்திற்கும் பொருந்தும். அப்படி இந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை எழுத்தின் வலிமை ஒவ்வொரு frameலும் தெரியும். Robert Richardson எப்பொழுதும் மாஸ்டரே, அதை படத்தின் ஆரம்ப காட்சி உங்களுக்கு உணர்த்தும். அதுவும் Ennioவின் இசை, முடிவில் கதை நகரும் விதத்தை ஆரம்பத்திலேயே புரியவைக்கும்.

பொதுவாக TV Seriesல் ஒரு சுதந்திரம் உண்டு, அது தான் கால அவகாசம். ஒரு கதாபாத்திரத்தை பற்றி விவரித்து கூற அதற்காக எடுத்துக்கொள்ளும் காலம் வெள்ளிதிரையை விட சின்னதிரையில் அதிகம். QTயின் படங்களில் குறிப்பாக இந்த படத்தில் கதாபாத்திரத்தின் அமைப்பின் நுணுக்கங்களை மட்டும் முதல் 80 நிமிடங்களில் காணலாம். சரியாக 85வது நிமிடம் நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் அளவிற்கு ஒரு காட்சி. அந்த நிமிடம் முதல் படம் முடியும் வரை உங்கள் இடம் அதுவாகவே இருக்கும்.

கதாபாத்திரத்தின் பலம் எழுத்தில் இருப்பது போல் திரையில் தெரிந்தால் மட்டுமே திரைக்கதைக்கு பலம் சேர்க்கும். அவர்கள் பேசும் வசனங்கள் ஆகட்டும். அவர்களின் பாவனைகள் ஆகட்டும், அனைத்தும் ஒன்று சேர் திரை மொழியாக மாறும் பொழுதே. வார்த்தைகள் காவியமாக மாறுகின்றன.

கதாபாத்திர அமைப்பிற்கென்று ஒரு இடம் திரைக்கதையில் சிலர் மட்டுமே அமைக்கின்றனர். என்னை பொறுத்தவரை இதுவே QTயின் style என்று நான் கற்றுக்கொண்டது. இரத்தம், வசனங்கள், கட்ஸ் இவைகள் இல்லை.

இது ஒரு பக்கா Tarantino படம். அதுவும் நான் திரையில் காண தவறவிட்ட மிக முக்கியமான படம்.

The Hateful Eight – படம் பார்த்து கதை சொல். அதை தன் கதாபாத்திரங்கள் மூலம் சொல்லச்செய்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s