Rage

Kali (Malayalam)
Genre: Romance / Thriller

Anger is just anger. It isn’t good. It isn’t bad. It just is. What you do with it is what matters. It’s like anything else. You can use it to build or to destroy. You just have to make the choice. – Jim Butcher, White Night.

கோபத்தின் வெளிப்பாடு சந்தர்பம் சூழ்நிலையை விட, மனிதனின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பதை நமக்கு உணர்த்தும் படமே இந்த Kali.

bg

ஒரு வரி கதை அல்லது மூளையை கசக்கும் கதை எதுவாக இருந்தாலும் கதாபாத்திர வடிவமைப்பு சரியாக இருந்தால் மட்டுமே அந்த கதை நம்முள் ஒட்டும். எளிமையாக சொல்ல போனால் “கதையோடு என்னை நான் connect செய்து கொண்டேன்” என்று பலர் கூறுவர் அதற்கு காரணம் படத்தில் உளாவும் கதாபாத்திரங்களே காரணம். எடுத்துக்காட்டு Jurassic Park மற்றும் Avatar. இரண்டும் நாம் பார்க்காத உலகம் ஆனால் நம்மால் படத்தின் கதாபாத்திரங்கள் உணரும் உணர்வுகளை உணர முடியும். ஆக கதாபாத்திர அமைப்பு மிகவும் முக்கியம்.

அப்படி சித்து மற்றும் அஞ்சலி என்ற இரு உள்ளங்களுக்கு நடுவே நடக்கும் கதை இந்த படம். ஆத்திரம் (Short Temper) ஒரு மனிதனை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்பதின் பிரதிபளிப்பே படத்தின் திரைக்கதை.

காதலில் துவங்கி கோபம் வரை. படத்தின் திரைக்கதை அமைப்பை ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் “ஓடையில் விழுந்த தாமரை இலை, ஆற்றில் பாய்ந்தோடிச் சென்றது.” இந்த வரியின் உள்ளர்தத்தை உணர்ந்தால் படத்தின் போக்கு புரியும்.

விசாரணை படத்திற்கு பின் நான் பார்த்த மிகவும் Intense ஆன படம் இதுவே.

அதுவும் ஒரு ஒளிப்பதிவாளர் இயக்குனராக மாரும் பொழுது வார்த்தைகளை திரைவடிவமாக மாற்றுவதில் அவர்களை மிஞ்ச ஆள் இல்லை. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த படத்தின் இடைவெளி காட்சியும் அதன் பின் நடக்கும் சம்பவங்களும். அதனை படமாக்கிய விதமும்.

IMG_20170303_020913.jpg

படத்தின் மிகப்பெரிய பலம் துல்கர் மற்றும் சாய் பல்லவி. ஆனால் அவர்களையும் மீறி நம்மை கவரும் இரண்டு விஷயம் இசை மற்றும் ஒலிக்கலவை.

இந்த கதைக்கான கதாநாயகன் இசையே. காரணம், இசை என்பது தாளம் போட மட்டும் அல்ல. அதற்கு ஆல்பம் என்ற பெயரில் தனியாக சிலபல படைப்புகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. திரைப்படத்தில் இசை என்பது ஒருமொழி, கதாபத்திரத்தின் உணர்வுகளை மொழிபெயர்க்கும் ஒரு அலை மொழி. அந்த விதத்தில் இசை இந்த படத்திற்கு ஆற்றியுள்ள பணியை விவரிக்க எண்ணிடம் வார்த்தைகள் இல்லை. கோபி சுந்தர் எந்து கூறினால் Loot என்ற வார்த்தையே என்மனதில் தோன்றும், அதை இந்த படத்தின் மூலம் உடைத்தெரிந்தார். இன்னும் அவர் பல நூறு படங்கள் இசை அமைத்தாலும், இதுவே அவரின் சிறந்த படமாக இருக்கும்.

இந்த படம் முடிந்தபின் என்னுள் தோன்றியது Quentin Tarantino. ஆம் அவரே. பல இளம் இயக்குனர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை QT Style. என்வென்று எட்டிபார்த்தால் இரத்தம், வன்முறை, Non Linear, Car Dicky Shots, Dialogues, Making style இவை மட்டுமே இருக்கும். என்னை பொறுத்தவரை அவருக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. பலர் அவர் ஸ்டைல் என்று கூறி ஏதேதோ எடுத்தாலும், நான் பார்த்த முதல் QT Style படம் இதுவே. இது என்னுடைய கருத்து. அது ஏன் என்று நான் கூற விரும்பவில்லை. படம் பார்த்தவர்களுக்கும் QTஐ சரியான முறையின் பின் பற்றுபவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

படத்தில் என்னை உருத்திய ஒரே விஷயம் யூகிக்க முடியாத இரண்டாம் பாதியை யூகிக்க முடிந்த Cliché climaxசுடன் முடித்தது.

Kali – அடக்க முயன்றாலும் நம்மை மீறி வரும், மீறி அடக்கினாலும் பொங்கி எழும். எந்த ஒரு செயலுக்கும் இடம் பொருள் ஏவள் தேவை. அது கோபத்திற்கும் பொருந்தும்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s