குற்றம் 23
குற்றமற்றவன் என்று இங்கு யாரும் இல்லை. செய்யும் குற்றம் என்வென்பதே இங்கு கேள்வி. தவறென்றுனர்ந்தவன் தவரிழிக்க மாட்டான். மீறி தவறிழைப்பவன், அதை தவறாக என்னமாட்டான். இதுவே ஒருவன் மீண்டும் மீண்டும் தவறுகளின் படியலை உயர்த்திக்கொண்டே இருப்பதற்கு காரணம்.
23. இது வெறும் எண்னோ எண்ணிக்கையோ அல்ல. இந்த 23 பிறப்பை நிர்ணயிக்கும் குறி. ஆணாகபட்டவனும், பெண்ணாகபட்டவளும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர். எண்ணிக்கை குறைந்தாலும் மனதளவில் விரிசல். காயம். ஏக்கம். ஈரமில்லா வார்த்தைகள் என பல பல குண்டூசிகள் ஆண்மகனைவிட பெண்ணையே அதிக காயப்படுத்தும். ஆக எப்பாலாயினும் 23 முக்கியம். தலைமுறையை கடக்க, கொடி பறக்க செய்ய ஒரு வாரிசு அனைவருக்கும் அவசியமே. அப்படி வாரிசிற்காக ஏங்கும் மக்களின் மனவலியை பணமாக்கும், தன் ஆசைக்கும் இணங்கச்செய்யும் இரு கும்பலின் கதையே இந்த குற்றம் 23.
ஈரம், வல்லினம், ஆறாது சினத்தை தொடர்ந்து அறிவழகன் இயக்கி இருக்கும் மற்றொருபடம். அவர் இயக்கி இருக்கும் மூன்றாவது இன்வெஸ்டிகேஷன் படம் இது. பொதுவாக இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் குறிப்பீடுகள் அதிகமே காணப்படும். காரணம், குற்றத்தின் தன்மை மற்றும் உள் கூறுகள் பார்க்கும் அனைவருக்கும் குழப்பமில்லாமல் அனைவரும் புரிய வைக்க இது போன்ற படங்களில் வழக்கமான படங்களை விட அதிகபடியான மேற்கூறுகள் இருக்கும். இந்த படமும் அப்படியே.
சொல்லவந்த கருத்துக்கள் அனைத்தும் தெளிவர இருந்தாலும், யூகிக்க முடிந்த காட்சிகளே சற்று இறக்கம். இருப்பினும், பிற்பாதியில் வந்த குற்ற பின்னனி, அதில் பாதிக்கபட்டவரின் வலிகள் அதை மறக்கடிக்க செய்கிறது.
குழந்தையின்மை வலியை உண்டாக்கினாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் அந்நபர்க்கு இருந்தாலும் சுற்றாரும் உற்றாரும் செய்யும் தவறுகளே செயற்கை வாழ்க்கையை நோக்கி பலரை பயணிக்க செய்கிறது. குழந்தையின்மையை போக்க, பெற்றோரின்றி தவிக்கும் சிசுவை தன் குழந்தையாக பாவித்தாலே பெரும் பலன்கிட்டும் என்று கூறி முடிகிறது குற்றம் 23.