Shadows Of Yama

Yaman (எமன்)

இது ஒரு ஜீவா சங்கர் படைப்பு.

செய்யும் செயல் எதுவாயினும்,
அதன் விளைவு எப்பொழுதாயினும்,
உள் உருத்தியபடி இருக்கும்.
நல்லதோ கெட்டதோ.
அது உன் செயலை பொருத்து.

ஜீவா சங்கர் – எனக்கு மிகவும் பிடித்த ஒளி ஓவியன் திரை ஓவியன். அவர் இயக்கிய நான்’ ஆகட்டும், அமர காவியம் ஆகட்டும் இரண்டில் தன் திரை மொழியினை எந்த ஒரு சருக்கல் இன்றி படைத்திருப்பார். தான் எழுதிய வரிகளை, தன் காண் ஒளியை தானே திரைக்கு ஓவியமாய் கொண்டுவரும் பாக்கியம் வெகுசிலருக்கே கிடைக்கும். அந்த வெகுசிலரில் நான் மிக முக்கியமாக கருதுபவரில் இவரும் ஒருவர். தன் முதல் இரண்டு படங்களும் வெவ்வேறு துருவத்தை நோக்கிய பயணித்த அவர். தன் மூன்றாம் படைப்பிலும் வேறு துருவத்தை நோக்கி பயணித்திருப்பார்.

‘மனித இரத்தத்தினால் ஆனா சாக்கடை’ அரசியல் என்று கூறி, சகுனிகள் சூழ இருக்கும் களத்தினை மையப்படுத்தியதே இந்த படம்.

img_20170302_153657

எதிரே நிற்கும் எதிரி, அருகே இருக்கும் துரோகி, விளைவை எண்ணி முள் மெல்லும் அமைச்சர், விளைவித்தவனை அறியா எம நாயகன், பகடையாடும் கூன் தோள் வாள், என ஒரு போரில் இருக்கும் அத்தனை சாராம்சமும் இருக்கும் ஒரு இடம் அரசியல் களம். இந்த சாராம்சம் கொண்ட கதாபாத்திரங்களை களத்தில் இறக்கிவிட்டு காய் நகர்த்தும் போது ஏற்படும் நிகழ்வுகளின் கூட்டமைப்பே இந்த ‘எமன்’.

ஆரம்பம் முதல் இறுதிவரை, எங்கும் சோம்பல் தட்டாமல் நூல் பிடித்தார் போல் செல்லும் போக்கு நம்மை பகைவர்களோடு பயணிக்க செய்யும்.

நல்லுள்ளம் கொண்ட ஒருவன் மாற பல்லாயிரம் மணிதுளிகள் தேவை அல்ல, ஒரு மணி துளி. அந்த ஒரு மணி துளி எப்பெர்பட்ட சுழலில் அமைகிறது என்பதே முக்கியம். சாத்தான் உட் புக அந்த தருணம் போது. அப்படி தனக்கு அமையும் தருணத்தை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் ஒருவன் இந்த எமன்.

எமனுக்கும் அடி சருக்கும்.
விளைவை எண்ணி முள் மெல்லும் அமைச்சரை போல், எமனாய் இருந்தாலும் விளைவுகள் சுடும் என்பதை தன் திரை பாணியில் ஜீவா சங்கர் கூறியுள்ளார்.

சில உண்மைகள் மறைக்கபடுவதே நலம். அப்படி மறைக்கபட்டாலும் விளைவுகள் அறுக்கபடுபவனால் அறியாமலேயே அறுக்கபடும். விதியின் வேறு ஒரு காரணத்தால்.

எமன் – காரணமின்றி பாசக்கயிறு வீசப்படாது.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s