Black Matter’s Of Fury Road

Mad Max Fury Road : Black & Chrome Edition.

fb_img_1481409214037

பெண்ணை மதிக்கும் ஒருவனால் மட்டுமே, பெண்ணியத்தை போற்றும் ஒரு படைப்பினை படைக்க முடியும்.

MadMax Fury Road, 2015 ஆம் ஆண்டில் வெளியான Post Apocalyptic வகையான ஒரு படம். பலருக்கும் இது வெறும் ஆக்‌ஷன் படமாக தோன்றினாலும். என்னை போன்ற பலருக்கு இந்த படம் ஒரு பொக்கிஷம்.

உலகலவில் இதுவரை வந்த Post Apocalyptic படத்தில் இது ஒரு மிகச்சிறந்த படைப்பாகவே கருதப்படுகிறது. அமெரிக்காவில் எடுக்கபடும் வழக்கமான dystopian படமாக இது இல்லாமல் இருப்பதற்கு காரணம். மில்லர் கையாண்டுள்ள விஷயங்கள்.

vlcsnap-00314_1488356579764

img_20170301_135334

பெண், நீர், பெட்ரோலியம் இவற்றை கட்டுபடுத்தும் நபர் எவராக இருந்தாலும், விதியின் படி அவர் முடிவு யூகிக்க முடியா நிலையில் இருக்கும். இவை மூன்று மட்டுமல்லாமல் பசுமையின் முக்கியத்துவத்தை பற்றியும், தாய்பாலின் முக்கியதுவத்தையும் இப்படத்தில் தெள்ள தெளிவாக கூறியிருப்பார்.

2015ல் வெளியாகி, படம் வெற்றியடைந்த பின்னர், ஏன் இந்த படத்தை இப்பொழுது கருப்பு வெள்ளையில் வெளியிட வேண்டும்.?? காரணம் ஏதேனும் உண்டோ..?? கண்டிப்பாக.

vlcsnap-00312_1488356579992

மக்களாகிய நாம் எப்பொழுதும் படைப்பாளியை விட தெளிவு. ஒரு post apocalyptic படம் என்றால் இப்படி தான் இருக்கும் என்ற ஒரு பிரம்மையை நாமே உருவாக்கி கொள்கிறோம். அதற்கு காரணம் இதற்கு முன் நாம் பார்த்த படைப்புகள். அதில் இருந்து நம்மால் மீண்டு வரவே முடியாது. காரணம் இது தான் அந்த உலகம் என்று உருவாக்கியவனின் பிரம்மையில் மூழ்கி விடுகிறோம். அடுத்து வருபவர் உலகத்தை உருவாக்கினால் நமக்கு பிடிக்காத ஒப்பிடலை மினிமம் சதவிதம் கூட யோசிக்காமல் அந்த படைப்பின் மீது வைத்துபார்ப்போம். இந்த படத்தின் முதல் பிரதி Orange, Warm & Black’s மிகவும் dominant ஆக இருக்கும் இதற்கு முன் நாம் பார்த்த சில post apocalyptic படங்களின் வண் அமைப்பில் இருந்தாலும், நன்கு நோக்கினால் இந்த படம் தனித்து நிற்பதற்கான காரணம் அறியலாம்.

vlcsnap-00313_1488356579882

“Worming their way into the black matter of in my brain ” – Max

இங்கு பல அதிசயங்கள் இருந்தாலும் எப்பொழுது பார்த்தாலும் நான் வியக்கும் சில அதிசயங்கள் Metropolis, Kannathil Muthamittal, The Smell, Kammattipadam அந்த அதிசயங்களில் மிக முக்கியமானது Madmax. அதுவும் Black & Chromeல்.

vlcsnap-00311_1488356580123

படத்தை அப்படியே கருப்பு வெள்ளையாக மாற்றாமல் Red மற்றும் Orangeல் பணிபுரிந்து வெளியிட்டமையின் அருமை வெறும் கருப்பு வெள்ளை ரசிகர்களால் மட்டுமே உணர முடியும். இந்த கருப்பு வெள்ளை வெளியீட்டை பார்த்தால் ஏன் Film Noir படங்கள் 99% வெறும் க்ரைமாக எடுக்கப்படுகிறது என்று புரியும். வண்ணத்தில் வெளியான அந்த பிரதி வியப்பை உருவாக்கியது, கருப்பு வெள்ளை பிரதி நம்முள் ஒரு படபடப்பை (psychological impact) உருவாக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் இதய துடிப்பு அதிகரித்து கொண்டே சென்றது.

“My life fades. The vision dims. All that remains are memories.” இந்த வசனம்
Mad Max The Road Warrior படத்தில் வரும் வசனம். அந்த காட்சியும் படத்தில் ஆங்காங்க காட்டப்படும். அந்த காட்சி நமக்கு உலகத்தின் அழிவை நன்றாக உணர்த்தும். நீருக்கான போர் என்றால், அது ஒரு இடத்தையே இருள் சூழும் வழியே தவிர. பசுமையாக்கும் வழியல்ல. வண்ணத்தை விட, கருப்பு வெள்ளையில் அதன் வலியினை இன்னும் அதிகமாகவே உணரலாம். உணர முடிந்தது.

img_20170301_135405

அதே போன்று Worship Of Vehiclesன் காட்சிபடைப்பு, கருப்பு வெள்ளையில் பார்க்கும் பொழுது. நம்மையும் மீறி சில உணர்வுகளை நம்முள் ஓடச்செய்கிறது. இப்படி, இதற்கு முன் பார்த்த வண்ணமில்லா வாழும் மனிதர்களின் வாழ்க்கையை, அவர் மனநிலைக்கே சென்று பார்க்க வழிவகுக்குகிறது இந்த Black & Chrome print.

படத்தில் இருக்கும் நுணுக்கங்களை பற்றி மீண்டும் நான் கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. பல Sci Fi படங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறினாலும். என் மனம் நம் எதிர்காலம் wasteland ஐ போலவே இருக்கும் என்பதை இந்த படம் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தோன்றும். அதுவும் கருப்பு வெள்ளையில் பார்க்கும் பொழுது ஒரு வித பயத்தை உருவாக்கியது.

இந்த படம் மனித உடலில் உள்ள நரம்பு அமைப்புகளை போன்றது. வெளி தோன்றத்தில் ஒரு சாதாரண உடலாக பலருக்கு தோன்றினாலும், அதன் உள் அமைப்புகளை எல்லோராலும் உணர முடியாது.

Madmax Fury Road – என்றும் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும் ஒரு வியக்கதக்க படைப்பு.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s