Its a Mad Mad World

Madmax Fury Road
Genre : Action / Adventure

பெண்ணியம் போற்றும் Madmax Fury road.

எந்த ஒரு படமானாலும் அதற்கு detailing மிகவும் முக்கியம். களம், கலாச்சாரம், மக்கள், வாழ்வியல் மற்றும் சூழல் அனைத்தையும் பிசுறு தட்டாமல் திரையில் காட்டினால் மட்டுமே பார்ப்பவர்கள் இயக்குனர் காட்டும் உலகினுள் பயணிக்க முடியும்.

சிலர் உண்டு படத்தில் கதையே இல்லை என்று கூறும் மக்கள். அவர்களை நான் சீண்டுவதே இல்லை, காரணம் நான் சினிமா பார்ப்பவன். இயக்குனர் கூற வரும் கதையை கேட்பவன்.

Madmaxஐ பொறுத்தவரை கதையை விட களமே முக்கியம். களத்தில் நடக்கும் சம்பவங்களும், மக்களும், மக்களின் உணர்வுகளே முக்கியம். அதை திரைவடிவமாக கொண்டுவர இவரை மிஞ்ச ஆல் இல்லை. அவரே George Miller. சினிமா என்பது திரை வடிவம், ஒரு visual medium என்பதை எனக்கு சரிவர உணர்த்திய பலரில் இவரும் ஒருவர்.

Madmax Post apocalyptic Australiaவை பற்றியது. மனிதனாக பிறந்த அனைவரும் பொக்கிஷமாக கருதுவது நீர், பசுமை மற்றும் பெண். இந்த மூன்றையும் கட்டுபடுத்தினால் அது நமக்கு அழிவையே தரும். அந்த கருத்தை அடிப்படையாக கொண்டு தனக்கான யுத்தியில் ஒரு உலகத்தை படைத்து, அதில் பெண்ணிய தெய்வமான Furiosa மற்றும் பாலைவன கடவுள் Immortan Joe இருவருக்கும் இடையே நடக்கும் போரே இந்த Madmax Fury Road.

வாகனங்களை வழிபடும் மக்கள். பசுமையை தேடி செல்லும் தெய்வங்கள். வாரிசிற்காக பெண்மையை அடக்கும் கடவுள். கடவுளின் பார்வைகாக தன்னையே சமர்பிக்கும் மதம் கொண்ட மக்கள். போர் முரசோடு வீரர்களை ஊக்கபடுத்தும் கலைஞர்கள். எதிர்கால சந்ததிக்கு விதைகள் என்றால் என்னவென்று தெரியாமல் போகலாம் என்ற கூற்று. காமம் சூழ்ந்த நிலம் விரிசல் நிலமாகவே மாறும், மாமிச நிலத்தில் கால்படா பாதங்கள். மண்ணை போற்றும் பெண். தாய் பாலை தனதாக்க விரையும் கொடுங்கோள் என பல கூற்றுகளை தன்னுள் அடக்கி, வருங்காலம் இப்படியும் இருக்கலாம் என்ற பயத்தையும் நம்முள் ஏற்படுத்தி, சொல்ல வந்த கருத்தையும் ஆணித்தனமாக கூறிய படமிது.

பெண்கள் இல்லா நிலம்,
பெண்னை போற்றா நிலம்,
வறண்ட நிலத்திற்கே சமம், என்பதை தன் பாணியில் வரைமுறைகளை உடைத்து நொருக்கி முதல் 30 நிமிடங்களும் நம்மை சீட் நுணியில் அமர்த்தி விஷுவல் மீடியத்தின் பலத்தை எடுத்து கூறிய படம் இது.

திரைக்கதையில் கற்று கொள்ள, திரைப்படம் என்றால் என்ன என்று கற்றுக்கொள்ள இந்த படத்தில் பல்லாயிர பக்கங்கள் உண்டு.

இவை அனைத்தும் இந்த படத்தை வெறும் ஆக்‌ஷன் படமாக பார்த்தால், அது வெறும் ஆக்‌ஷன் படமே. என்னை போல் பைத்தியம் பிடித்து இந்த படத்தை பார்த்தால் பல அழியா பொக்கிஷங்களும் கிட்டும்.

Madmax Fury Road – அழியா பொக்கிஷம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s