My 15 Films of 2016

2016 மறக்கமுடியாத ஆண்டு. பல படங்கள் என் பார்வையை மெருகேற்றியது. சொல்லப்போனால் 15 படங்கள். நிறைகளும் குறைகளும் நிறைந்த அந்த படங்கள். என் எண்ண ஓட்டத்தையும், அறிவு சார் எண்ணங்களையும் ஒருவிதமாக சீர்படுத்தியது என்றும் கூறலாம். இவை எனக்கு பிடித்தவை மட்டுமே தவிர சிறந்த படங்கள் என்றில்லை. இருக்கவும் செய்யலாம்.

#AandavanKattalai (Tamil)உறவுகளின் பார்வை. குற்றங்களின் பார்வை. இப்பொழுது மனிதர்களின் பார்வை.

மனிதனின் பார்வை எப்பொழுதும் நகைச்சுவை நிறைந்ததே. ஆனால் அந்த நகைச்சுவைக்கு பின் பல அழுத்தமான உணர்வுகள் இருப்பது உண்மையே, அந்த உண்மையை தோல் உரித்துக்காட்டிய படமே மணிகண்டனின் மூன்றாம் பார்வையான ஆண்டவன் கட்டளை.

#Anandham (Malayalam)Friends are the family we choose. சிறந்த திரைக்கதை ஒரு நல்ல படத்தை உருவாக்கும் என்பார்கள். அதே போல் நல்ல கதாபாத்திரங்கள் மற்றும் கதாபாத்திர அமைப்பும் ஒரு படத்தை யோசிக்க முடியாத உச்சிக்கு எடுத்து செல்லும். இந்த படம் கதாபாத்திரங்களை அடைப்படையாக கொண்டது. அதன் அருமை படம் முடிந்தபின் அருகில் இருக்கும் உற்றவன்(ள்) முகத்தில், நம் முகத்தில் நாம் பார்க்க இயலாத புன்னகையை அவன்(ள்) முகத்தில் பார்க்கும் பொழுது நம்முள் ஒரு கிளர்ச்சி எற்படும். அந்த கிளர்ச்சி புத்திசாலிதனத்தால் ஏற்படுத்த முடியாது. உணர்வுகளின் கோர்வையை நூலில் கோர்த்து அதை திரைக்காவியம் என்ற மாலையாக உருவாக்குபவனால் மட்டுமே தரமுடியும். அப்படிபட்ட பூமாலையே இந்த படம்.

#BatmanvsSupermanDawnOfJusticeஎப்பொழுதும் Zack என் favorite. காரணம் அவரின் திரைக்கவிதை. ரசிப்பவனுக்கு மட்டுமே கவிதை புரியும். மற்றவர்களுக்கு அது வெறும் வார்த்தைகளே. படம் பார்த்து கதை சொல். அதே சமயம் கதை சொல்பவனின் பார்வையையும் உணர்ந்து சொல். அது நம்மிடம் இல்லை என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத நம்மால் ஜீரணிக்க முடியாத உண்மை.

#HawksawRidge (English)ஆயுதம் ஏந்தா ஒரு மாவீரனின் கதை. நாம் வாழ்வில் காணும் சம்பவங்களே நம் வாழ்வை மாற்றும். அப்படி மாறினால் அதை பின்பற்றி வாழ்நாள் முழுவதும் ஒருவன் வாழ்க்கையை வாழ்வது என்பது சாத்தியமற்றது. அப்படி அதை சாத்தியபடுத்திய ஒருவனின் கதையே இந்த படம். இதுவரை நான் பார்த்த கிரிஸ்டியானிட்டியை மையப்படுத்தி எடுத்த படங்களில் இது மிகச்சிறந்த படமென்று நான் ஆணித்தனமாக கூறுவேன்.

#KadhalumKadanthuPogum (Tamil)பல வருடங்களுக்கு பின் நான் பார்த்து ரசித்த ROM COM படம். ஆரம்பம் முதல் இறுதிவரை முகத்தில் தோன்றிய புன்னகையை அழியாமல் பார்த்துக்கொண்ட படம்.

#Kammattipadam (Malayalam)கங்கையை தேடி கிருஷ்ணனின் பயணம். கங்கையை தாங்கும் சிவன். சிவ உலகை சார்ந்த மகன். சாம்பல் தீட்டின் ஒரு உருவம், கங்காதரன். மேல் தட்டு மகனான கிருஷ்ணா. கார்மேக கண்ணனாக இல்லை, கோகுலத்தின் கண்ணன்.

//// பாவங்களும் பாவிகளும் தழைத்தோழ்ங்குவர், அவர்தம் பாவங்களை உன்னிடம் குளிப்பதன் மூலம் சேர்ப்பர். //// ப்ரம்ம வைவார்த்த புராணத்தில் கிருஷ்ண பெருமானின் வார்த்தைகளை மையப்படுத்தியே இப்படம் இருக்கும்.  

மண்ணின் முக்கியம் என்பது, இரத்தம் படிந்தும், தன்னை சாம்பலாக்கி தூவ பறந்தும் அடங்காமை. அப்படிபட்ட மண்ணின் உணர்வை மண் மாறிய ஒருவன் மீண்டு வந்து, அதன் அருமையை சுட்டிக்காட்டும் பயணமே இந்த கம்மட்டிபாடம். இது ஒரு சாதாரண படைப்பில்லை நிலப்பரப்பை நேசிக்கும் ஒரு குல மக்களின் பிரதிபலிப்பை ஆணித்தணமாக கூறியுள்ள ஒரு புராணமே இந்த படம்.

#Kidari (Tamil)தவரிழைத்தவன் அதன் பலி ஆடுகளை தன் கால்களையே சுற்றிவரச் செய்வான் என்பது நியதி. அந்த நியதியின் திரைவடிவமே இந்த படைப்பு. சென்ற வருடம் வந்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது இந்த படம் என்று நான் கூறுவேன்.

#LaLaLand (English)பிறக்கும் நொடி முதல் இசை என்பது நம் வாழ்வியலோடு கலந்த ஒன்று. பிள்ளையின் இசைக்கு போட்டியாக, தாயின் தாலாட்டு. ஆக இசையை வாழ்வில் இருந்து பிரிக்கவே முடியாது. அது சினிமாவிற்கும் பொருந்தும். ஆனால் அதையே ஒரு கதை அம்சமாக கொண்டு படத்தை நகர்த்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அப்படி Sweeney Todd, Moulin Rouge, Nine, Chicago, Sunrise பட வரிசையில் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு மியுசிகல் இந்த LA LA LAND.

#Manamantha (Telugu)மனிதனால் தேடப்படும் மனிதர்கள் பற்றிய படம். முழுக்க முழுக்க மனித உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் இது. குறைகள் இருந்தாலும். படத்தின் போக்கு என்னை கதாபாத்திரங்களோடு பயணிக்க செய்தது.

#Pellichoopulu (Telugu)குடும்பம் சார் படங்களில் எப்பொழுதும் தெலுங்கு மொழிபடங்கள் தலை தூக்கியே நிற்கும். காதல் என்று வந்தாலும். பெண்பார்க்கும் படலத்தில் ஆரம்பித்து புது வாழிவியலை (திருமணம் அல்லா) துவக்கும் இரு முக்கிய கதாபாத்திரத்தை மையப்படுத்தி திரைக்கதை நகர்ந்தாலும், சுற்றியுள்ள கதாபாத்திரங்கள் மூலம் முக்கிய நபர்களின் உணர்வுகளை அழகாய் திரையில் கொண்டு சேர்த்ததில் இப்படம் பலரின் மனதில் நீங்கா இடம் பெற்றது. என் மனதிலும்.

#RajiniMurugan (Tamil)வாழ்வில் உள்ள சோகம், போராட்டம், இன்னல்களை திரையில் காட்டுவது மட்டும் யதார்த்தம் அல்ல. குறிப்பிட்ட அளவில் எதையும் கண்டுகொள்ளாமல் வாழும் மனிதர்களின் வாழ்வியலிலும் யதார்த்தம் காணலாம். அதற்கு அவன் இருக்கும் இடம் மிகமுக்கியம் என்பதை எனக்கு புரியவைத்த ஒரு கமர்ஷியல் படம் இது. பாரதிராஜா படங்களுக்கு பின் ஒரு பஞ்சாயத்து சீனை யதார்த்தமாக நான் பார்த்தது இந்த படத்தில் மட்டுமே. ஊர்புற மக்களுக்கே இருக்கு நக்கல், கேளி, பாசம், கோபம் அனைத்தையும் ஒன்று சேற்றார் போல் இதில் காணச்செய்த பொன்ராம் அவர்களுக்கு நன்றி.

#Sairat (Marathi)மனித உணர்வுகளில் இருக்கும் வெறிச்செயலை பற்றிய படம் இது. 

தமிழகத்தை விட ஜாதிகள் மீது அதிக அக்கரை கொண்டவர்கள் மராத்தி மக்கள். அவர்கள் வாழும் முறை, பேசும் வார்த்தைகள், விருந்தோம்பல், பழகும் குணம் இவை அனைத்திலும் அவர்களின் சாதி வெளிப்பாடு கலந்தே இருக்கும். அதில் இருந்து மீளுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. அப்படி மேல் ஜாதி பெண்ணை கீழ் ஜாதியை சேர்ந்த ஆண்மகன் காதலித்தால் என்னவாகும் என்று பலர் அறிந்ததே. பல படங்களும் வந்துள்ளது. தமிழிலும் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படமும் வந்துள்ளது. இருப்பினும் இந்த படத்தில் என்ன புதுமை இருக்கும். இருக்கிறது. அது தான் வாழ்வியல்.

தற்போது வரும் படங்களில் (அனைத்து மொழியிலும்) வாழ்வியலை பிரதிபளிக்கும் படங்கள் மிகக்குறைவு, அது Art House படங்கள் ஆகட்டும். Commercial படங்கள் ஆகட்டும். சதவிகிதத்தில் மிகக்குறைவே. அந்த வெற்றிடத்தை நிறப்பியது இந்த படம். ஒரு படம் எப்படி உருவாக்கபட வேண்டும். அதற்கு கதை முக்கியமல்ல, புதிதான கதைகள் இங்கில்லை. கதாபாத்திரங்களை உருவாக்கினாலே அவர்களின் வாழ்வியல் வெளிப்படும். அந்த வாழ்வியலை படித்தாலே ஒரு கதை உருவாகும். இது இந்த படத்தில் நான் கற்றுக்கொண்டது.

#TrainToBusan (South Korean)ஒரே வரியில் கூற வேண்டும் என்றால் நான் பார்த்த மிகச்சிறந்த zombie படம். உணர்வுகள் வாயிலாகவும், திகில் ஊட்டும் சம்சங்களுடனும் எந்த வித முகசலிப்பும் இன்றி. முழுக்க முழுக்க உணர்வுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பு.

#Visaranai (Tamil)நான் ஒரு dark விரும்பி. கரும்பக்கத்தை புறட்டும் எந்த ஒரு படமாக இருந்தாலும் அதன் மீது ஒருவித காதல் எனக்குண்டு. இப்படத்தின் மீது எனக்கு அளக்கமுடியா காதல். வார்த்தைகளால் விவரிக்க முடியா அளவிற்கு.

#Zero (Tamil)சுழியத்தின் உள்ளே சிக்கி தவிக்கும் ஆத்மா. ஆனால் கதையோ லிலித்தை பற்றியும் அதன் பழிவாங்கலை பற்றியும். அது ஒரு வித சருக்கலாக இருந்தாலும், ஒரு நல்ல சைகலாஜிகல் படம் பார்த்த திருப்தியை இந்த படம் நமக்கு தரும். 

இவை நான் பார்த்த படங்களை வைத்தே. Pink, Dangal நான் பார்க்க தவறிய மிக முக்கிய இரண்டு படங்கள். 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s