கிருஷ்ண புராணம்

கங்கையை தேடி கிருஷ்ணனின் பயணம்.

wp-1480875496651.jpg

ப்ரம்ம வைவார்த்த புராணத்தில் ஒரு பகுதி,

கங்கைத் தாய், கிருஷ்ண பரமாத்மாவிடம் மன்றாடி கேட்கிறாள், “பாதுகாவலனே, மகிழ்வுகளின் முதல்வனே, உனது உன்னதமான உறைவிடத்தை விட்டு தரங்குறைந்த கலியுகத்தில் எனது நிலை என்னவாக இருக்கும்?

பரமாத்மாவின் பதில், “கலியுகம் 5000 ஆண்டுகள் நீளும், அக்காலம் முழுதும் பாவங்களும் பாவிகளும் தழைத்தோழ்ங்குவர், அவர்தம் பாவங்களை உன்னிடம் குளிப்பதன் மூலம் சேர்ப்பர்.

ஐயாயிரம் பாவம் படிந்த ஆண்டுகளுக்கு அடுத்து வரும் 10,000 ஆண்டுகள் கெளரங்க மஹாபிரபுவின் பொற்காலம். மீதமிருக்கும் கலியுக ஆண்டுகள் பூமி பார்த்திராத அளவுக்கு பாவம் படிவதாக கலியின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாக இருக்கும்.

ஆட்சியின் முடிவில் புரவியேறி கல்கி அவதாரத்தில் கடவுள் வந்து இவ்வுலகில் வாழும் அரக்கர்களை அழித்து சத்தியயுகத்தை மீட்டெடுப்பார் “.

இந்த படத்திற்கும் ப்ரம்ம வைவார்த்த புராணத்திற்கும் என்ன சம்மந்தம். இருக்கிறது என்று படம் பார்க்கும் பொழுது என்னுள் தோன்றியது.

மருத நிலத்தின் வாழ்வியல். குடி பெயரும் கிருஷ்ணா நீர் தாண்டி ஒரு சந்திப்பில் கங்காவை சந்திக்க, கங்கா அவனை வழி நடத்தி சென்றான். ஒரு புது உலகை நோக்கி.

நிற வேறுபாடை வைத்து இருவர் வகுப்பினை சரியாக பிரித்து, வாழ்வியல் ஆதாரத்தை எந்த ஒரு ஒளிவுமறைவின்றி திரையில் படைக்கப்பட்டு, எழுதிய கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் மூலம் உயிர் கொடுத்துள்ளார் இயக்குனர்.

அதுமட்டுமின்றி கால வேறுபாட்டினை சிகை மற்றும் ஆடையில் மட்டும் காட்டாமல் சம்பவ இடங்களில் மூலம் காட்டி என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தினார். சில முக்கிய ஃப்ரேமில் அந்த மாற்றத்தை சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இதுவரை நான் கண்ட படங்களில் மிகவும் பிரம்மாண்டமான படமென்றால், இந்த படத்திற்கே நான் முதலிடம் தருவேன்.

6 மாதகாலத்தில் (ஆவணியில் துவங்கி மாசி வரை) இந்த படத்தை முடித்துவிட்டார்கள் என்பது மிகப்பெரிய அதிர்ச்சி. எந்த அளவில் திட்டமிட்டிருந்தால் இந்த படத்தை முடித்திருக்க முடியும் என்ற எண்ணத்தை என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

பலர் ‘பாலன் சேட்டா ராக்ஸ்’ என்று கூறிய போதும். என் மனம் கங்காவைவிட்டு விலகவில்லை. தண்டவாள அறிமுகத்தில் துவங்கி நதியை போன்று ஆங்காங்கு ஆர்பாட்டம் ஏற்படுத்தி, நதி எங்கே செல்கிறது என்று நதி அறியாமல் இருப்பது போல் ஒரு கதாபாத்திர வடிவமைப்பு. பாலன் பட்டையை கிளப்பி இருந்தாலும் அது இரு பழக்கபட்ட பிரம்மாவாகவே எனக்கு தோன்றியது. ஏன் பிரம்மா, கங்கையையும் கிருஷ்ணனையும் ஒன்றினைத்தவன். சிவனடியான் வழியனாகவே என் பார்வை அவனை பார்த்தது.

கிருஷ்ணா. பெயரின் உருவம், பெயரின் குணம். ஒரு சாரதி. பாலனின் தேரோட்டி. கங்கையின் மன்றாடிய வாக்குமூலம் அவனை மீண்டும் தன் பூமிக்கு வர செய்தது. சாரதியாக பயணித்து கங்கை சென்ற பாதையை தேடி, குருதி கலந்த கங்கை கலந்த பூமியை அடைகின்றான்.

இந்த படம் பார்க்கும் பொழுது இரண்டு படங்கள் என்னுள் வந்து சென்றது. ராம் கோபால் வர்மா இயக்கிய சத்யா மற்றும் சிட்டி ஆஃப் காட். சாயலாக இல்லை. அதில் ஒரு உலகத்தை காட்டி, அதில் நம்மை பயணிக்க செய்திருப்பர். அந்த பயணம் பல வருடங்கள் கழித்து இந்த படத்தில் கிட்டியது.

என்னை பொறுத்தவரை, படம் பார்த்து ரசிப்பதுமடுமின்றி, சில படங்கள் நமக்கு ஒரு விஷயத்தை கூறும். அதனை ஆராய்ந்து பார்க்கையில் நம் எண்ணவோட்டம் நமக்கே புரிய ஆரம்பிக்கும்.

நான் இந்த படத்தை பார்க்கும் பொழுது சில விஷயங்கள் ஓடியது,

கங்கையை தாங்கும் சிவன். சிவ உலகை சார்ந்த மகன். சாம்பல் தீட்டின் ஒரு உருவம். கீழ் தட்டு மகனான கங்காதரன். மேல் தட்டு மகனான கிருஷ்ணா. நிற வேறுபாடே அதை எளிதில் குறிக்கும். கார்மேக கண்ணனாக இல்லை, கோகுலத்தின் கண்ணன்.

ப்ரம்ம வைவார்த்த புராணத்தின் படி, “கங்கையின் வேண்டுகோள் கிருஷ்ணனை அடைய, அச்சமயம் கங்கை கலி சூழ இருப்பாள். அந்த இடமே பாலன் இதற்கு முன் மண்ணை அகலமுடியா விருப்பத்தை கூறுவான். பின் சாம்பலும் ஆவான். அதே இடத்தில் கங்கா ரத்தத்தில் மிதந்தான்.

//// பாவங்களும் பாவிகளும் தழைத்தோழ்ங்குவர், அவர்தம் பாவங்களை உன்னிடம் குளிப்பதன் மூலம் சேர்ப்பர். //// கிருஷ்ணனின் வசனம் “இது கங்கையின் ரத்தம் படிந்த பூமி”. புராணத்தில் கூறியபடி அரக்கர்களை கல்கி அவதாரத்தில் அழிப்பார் என்று பதிவு செய்யபட்டிருக்கும். கல்கி வெள்ளை குதிரை. குதிரை ஒருவனை தாக்கும் விதமாக கிருஷ்ணனின் தாக்குதல் இருக்கும்.” இது நான் படம் பார்க்கும் பொழுது என்னுள் ஓடிய அலைகளே. அதற்கு காரணம். கிருஷ்ணா மற்றும் கங்கா என்ற இரு துருவ பெயர்களே.

மண்ணின் முக்கியம். அந்த இடத்தில் இரத்தம் படிந்து, தன்னை சாம்பலாக்கி தூவ பறந்தும் அடங்காமை. அம்மண்ணை மண் மாறிய ஒருவன் மீண்டு வந்து, அதன் அருமையை சுட்டிக்காட்டும் இடம். இது ஒரு சாதாரண படைப்பில்லை நிலப்பரப்பை நேசிக்கும் ஒரு குல மக்களின் பிரதிபலிப்பு என்பதை ஆணித்தணமாக கூறியுள்ளது.

கம்மட்டிபாடம் – கங்கையை நோக்கிய கிருஷ்ண புராணம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s