A BEAUTIFUL LIE

There was a time above.
A time before.
There were perfect things, Diamond absolutes.
How things fall.
Things on Earth.
And what falls…… is fallen.
விடியலுக்கு முன் இருள் சூழ்ந்ததே இந்த உலகம். இருளைக் கடந்தால் மட்டுமே விடியல் என்ற வெளிச்சத்தை அடையமுடியும். மனிதனின் வாழ்வியலில் ‘இழப்பு’ என்பது இல்லாமல் இருக்காது. அந்த இழப்பைக் கடந்தால் மட்டுமே அவனால் தன் வாழ்க்கையின் நியதியை உணர முடியும். அந்த இழப்பு எப்படிபட்டதாக இருப்பினும் அதை கடந்தே ஆகவேண்டும்.
BVS 001 BW

COLOR OF LIFE

கருமை, கருவூலத்தில் இருந்தபடி மனிதனுக்குத் தெரிந்த அவன் பார்த்த முதல் நிறம். கண் திறந்த உடன் வெண் மதியின் வெண்மை அவன் பார்த்த அடுத்த நிறம். கருவில் இருந்து மீண்டு வந்த பின்னரே அவனால் ஒரு புது வாழ்க்கையை துவங்க முடியும். அவன் வெளிவர, தன்னை பனையமாக்கும் கடவுளே ‘தாய்’ என்பவள். வலியில் இருந்து மீண்டால் மட்டுமே ஒரு புது விடியல் பிறக்கும். அப்படி கருமையில் துவங்கி வெண்மையில் அடியெடுத்து வைக்கும், இழப்பின் ரணத்தை அழிக்க முடியாவிட்டாலும், அதை கடந்து தன்னை தானாக செதுக்கிய ஒருவனின் கதையே இது. A Beautiful Lie.
BVS 002
இழப்பு என்றால் என்னவென்றே தெரியாத வயது. பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் வயது. தன்னை வெறுமையில் விடுத்து, தன் வாழ்வின் தூதுவராக மாறிய பெற்றோரின் இறுதி சடங்கு. சவப்பெட்டிகள் அவனை பின் தொடர, அவனால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. பெற்றோர் இல்லா வாழ்வு அவனை பசுமை இல்லா வறண்ட பகுதியை நோக்கி ஓடச்செய்தது. யார் அவன்..??? வெறுமைக்கு காரணம் என்ன.
BVS 003 FAMILY
பனி பொழியும் மாலை. ஆர்பாட்டம் இல்லாத, வன்முறை அல்லா வாழ்க்கை. சந்தோஷத்தின் உச்சம் மூவரின் முகத்திலும் இருந்த நேரம். அந்த மாலை பொழுதே மறக்க முடியாத ஒன்று. அதை நினைக்க நினைக்க வரண்ட பூமியிலும் அவன் கால்கள் நிற்காமல் ஓடின. காரணம் அந்த தருணமே கடைசி தருணமாக அமைந்ததால். சருகுகள் படர்ந்திருந்தாலும், முட்கள் ஏற்படுத்திய வலி அவனுள் இருந்தது. மரக்கிளைகள் தடுக்கி கீழே விழுந்தாலும், நிற்காமல் ஓடினான். சோகத்தின் விளிம்பு வரை. அந்த மாலை பொழுது அவன் வாழ்க்கையை தலைக்கீழாக மாற்றும் என்று அவன் அறியாமல் இருந்தான். முகமறியா, பெயரறியா ஒருவன் துப்பாக்கி முனையில் மூவரையும் மிரட்டினான். நல்லுள்ளம் கொண்டவருக்கு உதவும் Zorroவும் முன்வராமல் போஸ்டராக காட்சியளித்தார். தன் குடும்பத்தை காக்க தானே முன் வரவேண்டிய கட்டாயம் அவன் தந்தைக்கு.
BVS 004 WAYNE DIEDதுப்பாக்கி வெடித்தது, தோட்டா தரையில் விழும் முன் அவன் தந்தை தரை சாய்ந்தார். தடுக்கிய அவன் தந்தையோடு சேர்ந்து நரகத்தின் குழியில் விழுந்தான். உயிரைப் பறித்த, சந்தோஷத்தைப் பறித்த அந்த தோட்டா துள்ளி குதித்தது. சிறுவனின் கண்ணீராக தீப்பொறிகள் சிதறின. கண்ணீர் துடைக்க ஆள் இல்லை அவனுக்கு.
BVS 005 MARTHAமணிக்கொடியில் துப்பாக்கி இருக்க, சிறுவரின் ஓலத்தை நரகம் மறைத்தது. தாயின் கண்களில் ஒரு வருத்தம், தன் மகனின் நிலைகண்டு. முத்துக்கள் சிதறின. காப்பாற்ற ஆட்கள் இல்லை. முத்துக்கள் சாலையில் சிதறின தன் குடும்பம் சிதறியது போல். ஓலத்தின் உச்சத்தில் சிறுவன் இருக்க. கடவுள் இருவரும் தரை சாய்ந்தனர்.
BVS 006 WAYNE FAMILYகணவன் மனைவியை நினைத்து ஏங்க, மனைவியோ தன் மகனை நினைத்தபடி இருக்க. இருவரின் பார்வையிலும் மகனே தென்பட்டான்.
BVS 007 MARTHA DIEDசிப்பியில் இருந்த முத்தை தவரவிட்டது போல், தாய் தன் மகனை தவறவிட்டாள். தவறவிட்டாலும் மகனின் மனம் முழுவதும் தாய் மட்டுமே இருந்தாள். தாயின் கை நழுவினாலும் ஆத்மா மகனையே சுற்றியபடி இருந்தது. சிப்பியின் முத்தாக.BVS 008 BATMAN BEGINS
இனியும் அந்த சிறுவன் இழப்பதற்கு ஏதும் இல்லை. நரகத்தில் விழுந்தார் போல் நினைத்த அந்த குழி அவனிற்கு பயத்தை ஏற்படுத்தியது. பயத்தை கடந்தாலே வாழ்க்கை. இருளுக்குப் பின்னரே விடியல் பிறக்கும். அவன் விழுந்தது குழியில் அல்ல, அவன் இருப்பது கருவூலத்தில். அவன் தாய் எப்பொழுதும் அவனுடன்.
அவன் எதிரே இருந்த வவ்வாள்களை பார்த்து இவன் பயப்பட, பயத்தை அவைகள் பயன்படுத்திக்கொண்டு அந்த சிறுவனை சூந்தன. அவைகளை போலவே இவனும் தன் பயத்தை பலமாக மாற்றிக்கொண்டான். தன்னை பிரதிபளிக்கும் அந்த சிறுவனுக்கு வவ்வாள்கள் வழிகாட்டின. வழிநடத்தின. கருவூலத்தில் இருக்கும் குழந்தையை, பயமின்றி அவை வெளிக்கொண்டு வந்தன. இருளில் இருந்து விடியலுக்கு அவனை அழைத்துச் சென்று BRUCE WAYNE என்ற அவனை BATMANஆக மாற்றியது.
In the dream, they took me to the light.
A Beautiful Lie.
Movie: Batman v Superman: Dawn of Justice (2016)
Track: A Beautiful Lie (Click to see the video)
Music: Hans Zimmer & Junkie XL

 

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s