KILLER’S LOVE STORY

Raman Raghav 2.0
காதல்,
ஆணிற்கு பெண் மீது ஏற்படுவதும்,
பெண்ணிற்கு ஆண் மீது ஏற்படுவதும்,
சில சமயம் ஒரே பாலினத்தின் மீது ஏற்படுவதும் உண்டு. உடல் சார்ந்தது.
ஒரே எண்ண ஓட்டத்தினால் உருவாகும் காதலை பார்பது மிக அரிது. ஒரே எண்ண ஓட்டம் பலருக்கு அமையாது. அது கனவில் மெய்படலாம். யதார்த்த வாழ்க்கையில் அமையும் என்ற பொய்யோடு வரும் காதலே அதிகம்.
vlcsnap-2016-08-10-14h15m36s780
காதலை அன்பு அல்லது ஈர்ப்பு என்றும் கூறலாம். தாயிற்கு மகன் மீது வருவது, தங்கையின் மீது அண்ணனிற்கு வருவது. அது போல, முன் பின் அறியா நபரின் எண்ண ஓட்டமும் தன் எண்ண ஓட்டமும் ஒற்றுபோகையில் அந்த எதிர் நபர் மீது ஏற்படும் ஈர்ப்பை காதல் (உடல் சார்ந்ததல்ல) என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்த படம் என் பார்வையில் ஒரு காதல் கதையாகவே தெரிந்தது.

ராகவின் மீது சிம்மிக்கு இருக்கும் காதல்.
ராகவ் இல்லாமல் ராமன் இல்லை. என்ற இரு மேற்கோள்களை மையப்படுத்தியே இந்த படம் நகரும்.
திருமணம் அல்லா சிம்மியின் வாழ்க்கை. தந்தையை விட்டு தனியே வாழும் ராகவின் மனநிலை. இரண்டும் ஒன்று சேர, போதை என்ற ஒன்று வாழ்வில்  தேவையானதாய் மாறுகிறது. அவளுக்கு காமமும் (காதலுடன்) இவனுக்கு போதை பொருளும் துணையாக இருக்க, இருவரின் போதையும் உச்சநிலை அடைகிறது.
vlcsnap-2016-08-10-14h13m06s421
அதே போன்று தன் எண்ணத்திற்கு உருவம் அமைத்தார் போல் இருக்கும் ராகவின் நிழலோடு வாழ விரும்பும் ராமன். அதை புரிய வைக்க அவன் எடுத்துக்கொள்ளும் வாழ்வியல் அமைப்பு ராமனுள் ராகவ் இருப்பது போல், இந்த ராகவிற்குள் ஒரு ராமன் இருக்கிறான் என்பதை அவன் உணரும் போது உண்டான ஈர்ப்பு, ராகவை முழு ராமனாக மாற்றியது.
இந்த இரண்டு வாழ்க்கை முறையே படத்தின் திரைக்கதை. வாழ்க்கையின் அத்தியாய பிரிவு போல படத்தின் திரைக்கதையும் அத்தியாயமாக இருக்கும்.
vlcsnap-2016-08-10-14h16m10s955
நம் ஒவ்வொருவருக்குள்ளும் Upside Down போன்ற சில குணாதிசயங்கள் இருக்கும். அதை எப்பொழுதும் நாம் பார்க்க இயலாது. அதற்கான தருணம் வரும் பொழுதே அதை நாம் காண முடியும். கோபத்தின் உச்ச நிலையாகவும், அன்பின் உச்சநிலையாகவும் இருக்கலாம். அந்த UPSIDE DOWN குணாதிசயத்தின் முழு உருவமே இந்த படம்.

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s