DRIVE- A Poetic Neo Noir

உறவுகள் என்பது உருவாவது அல்ல,
நாம் நமக்காக அமைத்துக்கொள்வது.
நாம் அமைத்துக்கொள்ளும் உறவை பொறுத்தே
அவர்களுக்காக நாம் செய்யும் செயல் அமையும்.
அந்த உறவு தாயாகவும் இருக்கலாம்,
காதலியாகவும் இருக்கலாம்,
தோழமையாகவும் இருக்கலாம்.
எந்த உறவாக இருப்பினும்,
உண்மையான அன்பிருந்தால் நாம் எதை பற்றியும் யோசிக்காமல் அவர்களுக்கு துணை நிற்போம்,  இறுதிவரை. உயிர் கொடுத்து.
vlcsnap-2016-08-05-00h46m12s929
இந்த படம், மேற் பதிவு செய்துள்ள வார்த்தைகளின் வெளிப்பாடே.
இந்த படம் நியோ நாயர் வரிசையில் மிகச்சிறந்த படமாக கருதப்படுகிறது வழக்கமான NOIR படங்களில் இருந்து இந்தபடம் மிகவும் வேறுபட்டு இருப்பதே இந்த படத்தின் மிக பெரிய வெற்றி.
vlcsnap-2016-08-05-01h25m35s495
வழக்கமாக Neo Noir படங்களில் இருக்கும் அனைத்து element இந்த படத்தில் மிகவும் செட்டிலான முறையில் அமைக்கபட்டிருக்கும். Femme fatale லின் negative shadesஐ மறைத்து ஒரு damsel (திருமணம் ஆகாத பெண்) லின் மூலம் ஆபத்தில் சிக்கும் படத்தின் நாயகன் என்ற அமைப்பினை பயன்படுத்தி இருப்பர். இதில் அந்த பெண்ணாக
Carey Mulligan நடித்திருப்பார். Blonde hair, மயக்கும் அழகு, அதேசமயம் வழக்கமான Femme Fetale கதாபாத்திரமாக இல்லாமல், நேர் எதிராக இருக்கும். ஆனால் கதை நாயகன் பிரச்சனையில் மாட்டுவதற்கான முக்கிய காரணம் அந்த கதாபாத்திரமே.
விஷுவல் முறையில் நேர்த்தியான Film Noir lighting அமைப்பை பயன்படுத்தி இருப்பர். சில முக்கிய காட்சிகளில் deep focus முறையும் பயன்படுத்தி இருப்பர்.
படத்தின் இசையும் 80களில் பிரபலமான இசை அமைப்பே பயன்படுத்தபட்டிருக்கும். படத்தில் பயன்படுத்தபட்ட உடைகளின் வண்ணங்களும் 1980களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
படத்தில் அமைக்கபட்டிருக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதை போக்கு நமக்கு Jean-Pierre Melville படங்களை நினைவூட்டும்.
vlcsnap-2016-08-05-02h04m45s757

DRIVER & HIS SCORPION JACKET

படத்தின் மிகப்பெரிய பலம் Ryan Goslingம் அவரின் நடிப்பும். தேளினை மையமாக கொண்டு அவரின் கதாபாத்திரம் வடிவமைக்கபட்டிருக்கும். சீண்டினால் தன் கொடுக்கில் இருக்கும் விஷத்தால் தாக்கும் தேளினை போல, Driverன் கதாபாத்திரம் இருந்தது.
Nicolas Winding Refn திரை மொழியின் அர்த்தத்தை உணர்ந்து மிகவும் சாதாரண கதையை தன் கவித்துவத்தின் எண்ணத்தின் மூலம் மிகச்சிறந்த படைப்பாக மாற்றிவிட்டார்.
DRIVE – திரைப்படத்தை அனுபவித்து பார்க்கும் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம்.
 TRAILER
IMDB
Advertisements

2 thoughts on “DRIVE- A Poetic Neo Noir

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s