PATHFINDER – EP01

PATHFINDER – அந்த ஒரு வார்த்தை
Pathfinder
சென்னை சென்ட்ரல், மணி இரவு 11.
என் மன ஓட்டம் இரயிலை எதிர் நோக்கி இல்லாமல், வேறொரு பார்வையில் இருந்தது. எப்போதும் நான் எண்ணும் என் சினிமாவை நோக்கி. என் பாதையை நோக்கி.
இன்றளவும் சினிமாவிற்கான என் பாதையை நான் தேடிக்கொண்டு தான் இருக்கின்றேன். பாதை என் கண்களுக்கு தெரிந்தாலும், அங்கு காணப்படும் வரிசை என் கண்களுக்கு Howrah Express போன்றே காணப்பட்டது. என் மனம் கூறியது அந்த இரயில் உன்னுடைய இலக்கிற்கான ஊடகம் அல்ல என்று, அந்த கூட்டமும் அவர்கள் எழுப்பும் சத்தமும் என் காதுகளுக்கு “ஜரகண்டி… ஜரகண்டி… ஏழு குண்டலவாடா வெங்கட ரமணா கோவிந்தா… கோ….. விந்தா..” என்றே கேட்டது, அவர்களை பார்க்கும் பொழுது திருமலையில் லட்டிற்காக இடித்து கொண்டு ஓடும் கும்பல், இப்பொழுது கையில் Scriptடுடன் கோடம்பாக்கத்தில் திரிவது போல் தோன்றியது,
முதலில் நான் கூற வினைவது.
சினிமாவில் மொத்தம் மூன்று வகையான மக்கள், என் பார்வையில்
1. கோடம்பாக்கம்.
2. R.A.புரம்
3. மைலாபூர்
அனைவரும் அறிந்ததே கோடம்பாக்கம் என்றால் என்னவென்று. அருமையான மசாலாவால் நிறப்பப்பட்ட பரங்கிமலை பாய் பிரியாணி போன்றது, அவர் கடை பிரியாணி காரம் காதில் தட்ட, ருசி இரண்டு நாட்களுக்கு நம் நாக்கில் ஊரியபடி இருக்கும். ஆனால் அதே சுவை வேறெங்கும் கிடைக்காது. அதே போன்று தான் சினிமாவிலும், குறிப்பிட்ட சிலரால் மட்டுமே அந்த அருமையான சுவையை தர முடியும்.
இரண்டாவது RA PURAM. அவர்கள் தன்னை ஒரு “கோட்டூர்புறம் Scorsese” என்றே பீத்திக்கொள்வார்கள். அது உண்மை இல்லை என்று அவர்களுக்கு தெரியாது (😀 ). அவர்கள் நின்றாள் “கலை”, நடந்தாள் “கலை”, சாப்பிடுவது “கலை”, சுவாசிப்பது “கலை”, படுத்தா “கலை”. . . அவர்களுக்கு தெரிந்தது கலை கலை கலை மட்டுமே. (ஆனால் மக்கள். . .?). ஒரு சிறிய எடுத்துகாட்டு கொடுத்தாள் உங்களுக்கு இன்னும் தெளிவாக புரியும், வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் “மஞ்சள் வெயில்” பாடலில் ஒரு montage வரும் கமல் மற்றும் ஜோ திரையரங்களில் படம் பார்த்தபடி இருக்க, montageன் முடியில் கமல் தூக்கத்தில் இருந்து எழுந்து கை தட்டி ரசிக்க, அச்சமயம் ஜோ படம் முடிந்தது என்று கூற, கமல் முழிப்பார் அவர் Mind Voice “என்னது படம் முடிஞ்சிடுச்சா.. :O “. இவர்கள் தரும் படங்கள் இப்படி தான் இருக்கும். அவர்கள் கலையை படித்த அளவுக்கு மக்களை படிக்கவில்லை. அவர்கள் செய்யும் தவறு தன் வாய்களுக்கு கொடுக்கும் வேளையை 10% தன்னுடைய பேப்பருக்கும் பேனாவிற்கும் கொடுத்தாள் நல்லது.
மீதம் இருப்பது மைலாப்பூர். அவர்கள் “சரவண பவன்” உணவை போன்றவர்கள், விலை மதிப்பு அதிகமாக இருந்தாலும் உணவு சுவையுடனும், சுத்தமாகவும் இருக்கும். இவர்கள் பக்கா Professionals. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது, ஆனால் அவர்கள் “ஏலியன்” இல்லை என்பது மட்டும் எனக்கு தெரியும். தன்னுடைய வேளையை தானாகவும், சரியாகவும் கும்பல் ஏதும் கூட்டாமல் செய்துமுடித்து, தான் உண்டு தன் வேளை உண்டு என்று இருப்பவர்கள். அவர்கள் சாமானிய வேலைக்காரர்கள். மன்னிக்கவும் “பிரம்மாக்கள்”.
இந்த மூன்று வகை பிரிவுகளில் இருந்து குறிப்பாக மைலாப்பூர் மற்றும் கோடம்பாக்கத்தில் இருந்து சில அபூர்வ முத்துகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. (குறிப்பு: நான் கூறியது அந்த Areaவை பற்றி அல்ல, வெறும் Flavour தான். யாரும் அடித்து கொள்ள வேண்டாம், என்னையும் அடிக்க வேண்டாம்.). மணிரத்தினம், ராம், KS ரவிகுமார், ஹரி இன்னும் பலர். முதலில் நாம் இதில் எதை சேர்ந்தவர்கள் என்று தேர்வு செய்ய வேண்டும். அல்லது அறிய வேண்டும்.
சரி நாம் அந்த வரிசைக்கு செல்வோம்.
இப்பொழுது என் முன்பு தவறான மக்களும், என்னை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் இரயிலும் உள்ளது. இதில் நான் ஏறினாள். முடிந்தது என் கதை. சுற்றி உள்ள அனைவரும் “இரயிலை தவற விடாதே, இது வேகமான Express விரைவில் உன் இலக்கை நீ அடையலாம்” என்று மார்கெட்டில் கூவும் படி கூவினர். என் முடிவு எனது முடிவே, நான் இந்த இரயிலில் ஏறப்போவது இல்லை, என் கண் பார்வையில் இருந்து அந்த இரயில் நகர்ந்தபடி இருந்தது. Reservation பெட்டிகளும் Un Reserved பெட்டிகளை போன்றே காணப்பட்டது, அதை பார்க்கும் பொழுது எனக்கு திருப்பதி லட்டு கவுண்டறே நினைவிற்கு வருகிறது. நான் கார்கில் போருக்கு சென்றிருந்தால் கூட பிழைத்திருப்பேன், இந்த வண்டியில் ஏறினால் எனது உயிர் நான் ஏறிய மருகனமே பிரியும், என்னை பொருத்தவரை இவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள். சிரித்தபடி என் புன்னகை அவர்களுக்கு வழி அசைகாட்டியது.
இப்பொழுது என் முன் அந்த இரயிலுடன் சேர்த்து வேறு யாரும் இல்லை. மனதளவில் ஒரு சின்ன சந்தோஷம். காரணம் இல்லை. இல்லாத வரை நல்லது. கூட்டம் குறைந்தது . தரைகள் தென்பட்டன. ஒரு பக்கம் ஆவின் பாலில் ஆவிபறக்க, மறுபுறம் காற்றில் குப்பைகள் பறக்கும் இடமிது என இப்பொழுதே என் பார்வைக்கு தெரிந்தது.  என்ன செய்வதென்று அறியாமல் தன் பையில் இருந்த ஒரு Notepadம், ஒரு கருப்பு நிற Jetter Penனையும் எடுத்து எழுத ஆரம்பித்தேன். வார்த்தைகள் வரவில்லை. குழப்பமே தோன்றியது. என்னை பாத்து நானே சில கேள்விகளை கேட்டுக்கொண்டான்.
உன்னுடைய இலக்கு எங்கே ?
என்னுடைய பாதை எது என்று எனக்கு தெரியவில்லை.
பாதையை நோக்கி சென்ற இரயிலும் சென்றுவிட்டது, வந்த ஒரு வாய்ப்பும் மறைந்துவிட்டது.
இப்பொழுது எங்கு செல்வது, எப்படி செல்வது என்று எனக்கு தெரியவில்லை…
இந்த உலகில் உள்ளே வந்தவுடன் நான் தன்னை ஒரு “கோட்டூர்புரம் SCORSESE” என்றே கற்பனை செய்து கொண்டேன். பின் சினிமாவிற்குள் வந்தவுடன் அவர்கள் என்னிடம் பல மசாலாக்களை கொடுத்து பிரியாணியை தயார் செய்ய சொன்னார்கள். எனக்கு அதில் உடன் பாடு இல்லை. பின் தான் அறிந்தேன், நான் ஒன்றும் “கோட்டூர்புரம் Scorsese”ம் அல்ல, ஒரு பிரியாணி Masterம் அல்ல, பின் நான் யார்…??? எதுவும் இல்லை.
பட்டு புழங்கும் இடத்தில் இருந்து கனவை நோக்கி வந்த ஒரு சாதாரணமானவன். ஆவின் இருக்கும் இடத்திலேயே ஆள் வினைகளும் உள்ளது. பின் குழப்பங்கள் மறைந்தது, என் Notepadஐ எடுத்தேன், என் பார்வையில் இருந்து ஆட்கள் மறைய ஆரம்பித்தனர். யாரும் இல்லாத அந்த இடத்தில் நான் என் Penனை அழுத்திய சத்தம் மட்டும் கேட்டது. பின் தன் மனதில் ஓடும் முதல் வார்த்தையை வெண்பக்கத்தில் பதிவுசெய்தேன்.
அந்த வார்த்தை…
PATHFINDER (பாதையை தேடி).
Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s